Friday 1 September 2017

மியாவாக்கி... குறைந்த இடத்தில் அதிக மரங்கள்!

வனத்தை உருவாக்குவதற்கு மியவாக்கி என்றொரு முறை இருக்கிறது. குறைந்த இடத்தில் அடர்வனத்தை (Thick forest) உருவாக்குகிற முறை இது. அகிரா மியவாக்கி (Akira Miyawaki) என்றொரு ஜப்பானியரின் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்ட இத்தகைய காடுகள் ஜப்பானில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன.  தாவரவியலாளர் டாக்டர் அகிரா மியாவாக்கி ஜப்பான் நாட்டில் உள்ள யோகோஹாமா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார்.  


இம்முறையில் இதுவரை 4 கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டு, குட்டிக் குட்டிக் காடுகளை உருவாக்கியிருக்கிறார் மியாவாக்கி. இவர் கண்டறிந்த முறை என்பதால், இவருடைய பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்புக்காக இவருக்கு 2006-ம் ஆண்டு ‘புளூ பிளானெட் விருது' (Blue Planet Prize) கொடுத்து கௌரவித்திருக்கிறது சர்வதேசச் சுற்றுச்சூழல் அமைப்பு.

இந்த முறையோட சிறப்பு என்னன்னா, பத்து வருஷத்துல ஒரு மரத்துக்கு என்ன வளர்ச்சி கிடைக்குமோ, அந்த வளர்ச்சி ரெண்டே வருஷத்துல கிடைச்சிடும்னு ஆய்வு முடிவுகள் சொல்லுது. ஆழமான குழிகளை எடுத்து அதில் கழிவுகளைப்போட்டு, நெருக்கமா செடிகளை நட்டுட்டாப் போதும். ஒளிச்சேர்க்கைக்காகச் சூரிய ஒளியைத் தேடிச் செடிகள் வேகமா வளர்ந்திடும். ஆழமான குழியில செடியை நடவு செய்றதால வேர் வேகமா கீழே இறங்கி, நல்லா நங்கூரம் பாய்ச்சி நின்னுக்குது. மியவாக்கியின் அறிவுரைப்படி செடிகளை நட்ட பிறகு முதல் மூன்று வருடங்களுக்குச் செடிகளை நீருற்றி பராமரிக்க வேண்டும். அதன்பிறகு அவை வனமாகிவிடும்.

வியக்க வைக்கும் மியாவாக்கி

குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரங்கள்.

1,000 சதுரஅடி நிலத்தில் 400 மரங்கள்.

பூமியில் வெப்பம் குறையும்.

காற்றில் ஈரப்பதம் தக்கவைக்கப்படும்.

பறவைகளுக்கு வாழிடம் உருவாகும்.

பல்லுயிர்ச் சூழல் மேம்படும்.

மூலம் :

And into the Forest I go, to lose my Mind and find my Soul

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...