Monday 7 September 2015

படித்ததில் பிடித்தது 1

                                                 சுவாமி விவேகனந்தர்

1) மனதை ஒரு செயலுக்கு பழக்கபடுத்தி விட்டால் நம்மை அறியாமலேயே அந்த செயல் ஒரு பழக்கமாகவும் பிறகு வழக்கமாகவும் மாறுகிறது.

2) மினசாரமும் மின்சார உபகரணங்களும் உள்ளது என்று வைத்துக்கொள்வோம், மின்சாரம் காத்தாடிக்கு சென்றால் காற்று வருகிறது, விளக்கிற்கு சென்றால் வெளிச்சம் வருகிறது. அதே போல மனம் என்பது மின்சாரத்திற்கு ஒப்பானது. மனம் கண்களுடன் சேர்ந்தால் பார்க்கிறோம், காதுடன் சேர்ந்தால் கேட்கிறோம் புலன்களான கண்ணும் காதும் வெறும் ஜடங்கள் அவைகளுடன் மனம் சேர்ந்தால் மட்டுமே இயக்கம்.

                                                                    ஓஷோ 

                                     அற்புதத்தில் அற்புதம்

1) நீங்கள் யார் என்பதை நீங்கள் உணர்ந்தவுடன் எல்லா நோய்களும் பறந்துவிடும். உங்கள் சுய அறிவை மறைத்து வைப்பதாலும், உங்களை நீங்கள் புறக்கணிப்பதாலும்தான்  நோய்கள் நிலைகொள்கின்றன.

2) வெளியே பார்க்கும் கண்களை மூடிக்கொள்ளும் போது கண்கள் வழியாக செயல்பட்ட அந்த ஆற்றல் உள்நோக்கி திரும்ப ஆரம்பித்துவிடுகிறது .

3) ஒரு மரத்தை நெருங்கினால் இனிய உணர்வு ஏற்படுகிறது. அந்த உணர்வு உங்கள் உள்ளிருந்து வருவது, மரத்திலிருந்து வருவதன்று. மரத்திடமிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமற் போவதால் நீங்கள் நிம்மதி அடைகிறீர்கள்.

4) பிரபஞ்சமே உன்னை வேண்டும் போது-கடவுளும் உன்னை வேண்டும் போது ஒரு அர்த்தம் , முக்கியத்துவம், நறுமணம் பிறக்கிறது.

5) களங்கமான வினா:பதில் தெரிந்து கொண்டே வினா கேட்பதுகளங்கமற்ற வினா: பதில் தெரியாமல் அறிந்து கொள்ளும் நோக்கோடு கேட்கும் வினா.

6) பொறுப்புணர்வை ஏற்காதவரை நீங்கள் உள்ளீடற்றவராகத்தான் இருக்க முடியும், மேல் மட்டத்தில்தான் மிதந்து கொண்டிருக்க முடியும், ஆழங்களுக்குள் செல்ல முடியாது.

7) அகபோருக்கான சரியான சொல் உராய்வு. உங்களுக்குள் உராய்வு இல்லையென்றால், நீங்கள் மேலோட்டமான ஆற்றலையே பயன்படுத்துவீர்கள்.

8) மனதோ (அ) உடலோ சொல்வதை கேட்பதில்லை என்ற முடிவை எடுத்து பாருங்கள் உள்முரண்  தோன்றும், உள்முரண் உராய்வை ஏற்படுத்தும்.

9) மனமும் , உடலும் எளிமையான, அற்பமான விஷயங்களுக்கே நம்மை இட்டுச்செல்லும். அதனை எதிர்த்து கடினமான செயல்களுக்கு உட்படும்போது  நமக்குள் ஒரு சக்தி பிறக்கிறது.

10) நீங்கள் ஒரு முயற்சி  செய்து பார்க்க விரும்பினால் வெற்றி பெற்றே தீரவேண்டும், இல்லாவிட்டால் முயற்சி செய்யாமல் இருப்பதே நல்லது.

11) வெற்றி பெற்றே தீருவது என்ற தீர்மானம் எடுத்த பிறகே முயற்சியில் இறங்குங்கள். தோற்கும் போறல்ல இது வென்றே முடிக்க வேண்டிய போர் இது.

 12) நீங்கள் ஒரு முறை வென்றுவிட்டால் வேறு அடுக்கின் ஆற்றலை வென்றுவிடுவீர்கள்.




No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...