Wednesday 6 July 2011

பெற்றோர்களுக்காக

தெய்வம், குரு இவர்களை விடவும் முதல் படியில்  இருப்பவர்கள் பெற்றோர்களே. ஒரு குழந்தையின் வளர்ச்சியில், மாற்றத்தில் பெற்றோரின் பங்கு முக்கியமானது. குழந்தைகளின் முதல் உதாரணம் பெற்றோர்களே, அவர்களிடமிருந்தே குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். பெற்றோர் கற்றுத்தராவிட்டால் வேறு யார் கற்று தருவார்கள். ஒரு குழந்தை வளரும்போது அதனிடம் எவ்வாறு நடந்துகொள்கிறீர்களோ, அவ்வாறுதான் குழந்தை வளர்ந்தபின் உங்களிடம் நடந்தகொள்ளும். இந்த உலகம் கண்ணாடி போன்றது, நீங்கள் எதை கொடுத்தீர்களோ அதுதான் உங்களுக்குத் திருப்பி கொடுக்கப்படும்.

பெற்றோர்களே, நீங்கள் பெற்றோர் ஆனா பின்தான் உண்மையான கற்றல் துவங்குகின்றது. முக்கியமாக உளவியல் கற்க வேண்டியது அவசியம். குழந்தையின் சிறுவயதில் நீங்கள் குழந்தையுடன் அதிக நேரம் செலவு செய்கிறீர்கள், குழந்தை வளர வளர இடைவெளி அதிகமாகிறது. குறிப்பாக விடலை பருவத்தில் அதிக மாற்றங்கள் தோன்றும், அந்த சமயங்களில் கண்டிப்பு, கட்டுப்பாடு இவற்றை விட பெற்றோரின் வழிகாட்டுதலும் அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகளும் அவசியமாகும். சிலநேரங்களில் சிலவிஷயங்களில்  குழந்தைகளின் முடிவுகளை நாம் ஏற்றுகொள்ள வேண்டும். அதனால் வரும் அனுபவங்கள் அவர்களை நெறிபடுத்தும்.

சிறு குழந்தைகளிடம்  சிறு சிறு கதைகள் மூலமாக நல்ல பண்புகளை வளர்க்க முடியும். உதாரணத்திற்க்கு திரு மயில்சாமி அண்ணாதுரை(சந்திராயன் திட்ட இயக்குனர்) அவர்களை சொல்லலாம். அவர் குழந்தையாக இருக்கும் பொழுது அவரது தாயார் கதைகள் சொல்லி தூங்க வைப்பது வழக்கமாம், அப்படி ஒரு நாள் அவர் கேட்ட கதை, இராமாயணத்தில் வரும் வாலியினுடையது. வாலி தனது எதிரில் நிற்பவரின் பாதி பலத்தை எடுத்துகொள்ளும் ஆற்றலுடையவன்  என்பது அவனது சிறப்பு.

அந்த கதையை முடிக்கும் போது, அவரது தாயார், "நாம் ஒவ்வொருவருமே வாலியாக மாறலாம், ஏனெனில் ஒவ்வொருவரிடமும் நல்ல மற்றும் தீய   குணங்கள், பழக்கவழக்கங்கள் உள்ளன. அவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை நம்மால் எடுத்துகொள்ள முடியும்" என்று முடித்திருக்கிறார். இந்த கதையை கேட்ட அடுத்த நாள் அவர்  பார்த்த முதல்  நபர் அவரது தந்தை. தந்தையிடம் என்னென்ன நல்ல விஷயங்கள் உள்ளன என்ற விபரமறிந்து அதனை பின்பற்ற துவங்கினர் திரு அண்ணாதுரை அவர்கள். தொ(ல்)லைகாட்சி  பார்ப்பது, உங்களது வேலைகள் இவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு  குழந்தைகளுடன் நேரம் செலவழியுங்கள்.குழந்தையின் மனநிலையை புரிந்துகொள்ளுங்கள், அவர்களை பக்குவப்படுத்துங்கள்.

முக்கியமாக தாய்க்கு குழந்தையின் ஒவ்வொரு பழக்கங்கள், குணங்கள், நிறைகுறைகள் மற்றும் உடலியல்பு ஆகியவை பற்றி நன்கு தெரியும். ஒரு குழந்தையின் மனநிலை, பழக்கவழக்கங்கள், குணங்கள் இவற்றை செம்மைபடுதுவதில் ஒரு தாயின் பங்கு இன்றியமையாதது. சில பெற்றோர் குழந்தைகளை எள்ளளவும் கஷ்டப்பட விடுவதில்லை, அதுவும் தவறு. எனவே குழந்தைகளுக்கு வழிகாட்டி அவர்களை நடக்க விடுங்கள் நீங்களே சுமந்துகொண்டு செல்லாதீர்கள்.

தினமும்,  உங்களுக்காக கொடுக்கப்பட்ட 24 மணி நேரத்தில், குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். பாசத்தை வெளிப்படுத்துங்கள், அவர்களுக்காகத்தானே காலமெல்லாம் கஷ்டப்படுகிறீர்கள். இந்த சிறிய பாலிசியில் தினந்தோறும் உங்கள் நேரத்தை  முதலீடு செய்யுங்கள், பின் முதுமை     காலத்தில்    அதன் பலன்களை முழுமையாக         அனுபவிக்கலாம். இதை தவறினால் உங்கள் முதுமையை நீங்கள் கழிக்கப்போவது தனிமையுடன்தான்.

 


http://www.dreamstime.com/photos-images/i-love-you.html

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...